fbpx

மக்களே சூப்பர் குட் நியூஸ்..!! ஆவின் பால் பாக்கெட்டின் விலை அதிரடி குறைப்பு..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிர்வாகம் சார்பில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் அதன் செறிவின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், 90 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்களின் விலையில் 2 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மிலி மற்றும் 150 மிலி அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் 2 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்துள்ளது. அதன்படி, 450 மிலி பால் இதுவரை ரூ.30-க்கு விற்பனையான நிலையில், இனி ரூ.28-க்கு விற்பனை செய்யப்படும்.

அதே போல், 150 மிலி பால் இதுவரை ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் பாலுக்கான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு 93436 17445 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால்..!! விசாரணையில் அதிர்ச்சி..!! சீல் வைத்த சிபிசிஐடி..!!

English Summary

The management of Aavin has informed that the price of 90 days non-perishable milk packets has been discounted by Rs.

Chella

Next Post

ஹத்ராஸ் பலி: ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்!

Thu Jul 4 , 2024
Hadhraz Bali: Russian President, Japanese Prime Minister condolence!

You May Like