fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு..!!

மத்திய அரசு ஜனவரி 2023 முதல் அகவிலை நிவாரணம் (DR) மற்றும் டிஏ(DA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜூலையில் இவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான தற்போதைய DA/DR விகிதம் 42% ஆக உள்ளது. அடுத்த ஊதிய உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு ஜூலை 2023இல் வெளியிடப்படும்.

பணிக்கொடை என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையாகும். அதிகரித்து வரும் விலை சூழலுக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்படுகிறது. டிஏ என்பது ஊழியரின் ‘அடிப்படை ஊதியத்தின்’ ஒரு நிலையான சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் ஆண்டுக்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. பொதுவாக டிஏ, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. டிஏ விகிதங்களின் அதிகரிப்பு செலவின அடிப்படையில் அரசாங்கத்திற்கு சுமையாக இருந்தாலும், இந்த முடிவு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் காலம் நெருங்கி வருவதால், அரசு ஊழியர்கள் ஜூலை மாதம் மீண்டும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

Chella

Next Post

ஆனந்த மழையில் நனையும் தமிழக மக்கள்….! 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க உள்ள கனமழை….!

Wed Apr 26 , 2023
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றாலே தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இந்த கோடை வெப்பத்தை தணிக்கும் விதத்தில், அவ்வபோது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அந்த வகையில், கோடை வெயிலை தணிக்கும் விதத்தில் […]

You May Like