fbpx

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இன்று முதல் ஆரம்பம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர்க்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, கடந்த மே 8ஆம் தேதி முடிவுகளும் வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆரம்பமானது.

அதன்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க துவங்கினர்.. கடந்த மே 8ஆம் தேதியிலிருந்து, மே 22ஆம் தேதி வரை இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. இதைத்தவிர நேரடியாகவே கல்லூரிகளின் உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பித்து வந்தனர். 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,07,299 இடங்களில் சேர 2,46,295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களில், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரானது.

அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மே 29 முதல் 31 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது. கல்லூரிகளில் 84,899 மாணவ-மாணவியர்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்து புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 23,295 மாணவிகளும் அடங்குவர்.

இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று 3ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன.. காலியாக உள்ள இடங்களுக்கு இன்று அதாவது ஜூலை 4ஆம் தேதி முதல் மறுபடியும் இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அதன்படி, இன்று ஜூலை 4இல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஜூலை 5ஆம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ஆம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், ஜூலை 7ஆம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் 1,07,299 இடங்கள் காலியாக உள்ளன.

அதில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை சேர்ந்துள்ள நிலையில், வருகின்ற ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு….! இன்று காலை 10:30 மணியளவில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு…..!

Tue Jul 4 , 2023
கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்து அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடித்து வைக்கும் அளவிற்கு வந்தது. ஆனால் இந்த வழக்கு தொடர்வாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் […]

You May Like