fbpx

ஷாப்பிங் செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! கணவரைப் பார்த்துக்க ஹஸ்பண்ட் கேர் துவக்கம்..!!

பெண்களுக்கு குட் நியூஸ்.. இனி ஷாப்பிங் போகும் போது தொல்லைகள் இருக்காது. இந்த சைஸ் சரியா இருக்காது என்றோ… துணியை எடுத்துக் காட்டும் சேல்ஸ் பெண்களிடம் அந்த கலரை எடுங்க என்று வழிந்தப்படியே ஜொல்லு விடுவதோ என எந்த இம்சையும் இல்லாமல் உங்க கணவரை கழட்டி விட்டுட்டு ஜாலியா ஷாப்பிங் செல்லலாம். கணவரைப் பார்த்துக் கொள்ள ஹஸ்பெண்ட் கேர் வந்தாச்சு. எவ்வளவு நேரமா இங்கே இருக்கிறது என்கிற இம்சை கிடையாது. போரடிக்காமல் மணிக்கணக்கில் பார்த்துக்குறாங்க. வழக்கமாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குந்தைகளை கவனமாக பார்த்துக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படுகிறது.

ஆனால், இப்போது ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் Husband day care centre தொடங்கப்பட்டுள்ளது. தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் வியக்கவைக்கும் விஷயங்களை அதில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், டென்மார்க்கில் உள்ள ஒரு கபே நிறுவனம் கணவர் பராமரிப்பு மையம் என்ற ஒன்ரை தொடங்கி உள்ளது. அதுகுறித்து அந்த நிறுவனம் தனது கடைக்கு வெளியே வைத்துள்ள விளம்பர பதாகையில் உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்கள் என்று இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த விளம்பரத்தில், உங்களுக்கு நேரம் தேவையா? ஓய்வெடுக்க நேரம் வேண்டுமா? ஷாப்பிங் செல்ல வேண்டுமா? உங்களது கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்கள். உங்களுக்காக அவரை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் அவருடைய உணவு பராமரிப்பிற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் எனக்கூறி உள்ளது. தற்போது அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சாதாரணமாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாமல், குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர்.

அதுபோல் ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம், என்பதை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Thu May 11 , 2023
மைக்ரோசாஃப்ட் கார்ப் இந்த ஆண்டு முழுநேர ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்போவதில்லை என்றும் போனஸ் மற்றும் ஸ்டாக் விருதுகளுக்கான பட்ஜெட்டையும் நிறுவனம் குறைக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. “கடந்த ஆண்டு, சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டிற்காக குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்தோம். உலகளாவிய பட்ஜெட்டை […]

You May Like