நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறோம். ஆகவே, நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து, இதில் வெளியாகும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை பார்த்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
அந்த வகையில், இன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், visiting medical officer பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை படித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது 65க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகளைப் பற்றி, அறிந்து கொள்வதற்கு இதன் அதிகாரப்பூர்வமான முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இங்கே பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், B.A.M.S, B.H.M.S போன்றவற்றில் பட்டம் பெற்ற நபர்களாக இருப்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 30,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தப் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல், மூலமாக தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள், https://bel-india.in/Documentviews.aspx?fileName=English%20ad-15-09-23.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, 28/9/2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.