இந்தியாவைப் பொறுத்தவரையில், ஹிந்துஸ்தான் நிறுவனம் என்பது மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இந்துஸ்தான் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்த பொருளாக இருந்தாலும், மிகவும் தரமானதாகவும் விலை மதிப்பு மிக்கதாகவும் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.
இந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம், தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, இந்த நிறுவனத்தில், தற்போது காலியாக இருக்கின்ற supervisor பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
தற்போது இந்த பணிக்கு 65 காலி பணியிடங்கள் இந்த நிறுவனத்தில், இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், bachelor degree in engineering, diploma engineering graduate, PG degree போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் குறைந்தபட்ச வயது 23 எனவும், அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வயது வரம்பு குறித்த தளர்வுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,20000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களோடு, 13.9.2023 அன்று மாலை அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.