fbpx

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி இப்படி, பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘ பி ‘ மற்றும் ‘ சி ‘ ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது . மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘ பி ‘ ( அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து ) மற்றும் பிரிவு ‘ சி ‘ ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள் . போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு ‘ பி ‘ மற்றும் ‘ சி ‘ ஊழியர்களுக்கு போனஸாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு 1,184 ரூபாயும் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மருத்துவமனயில் மேற்கூரை இடிந்து விழுந்தது விபத்து...! காப்பீட்டுக் கழகம் விளக்கம்...!

Tue Oct 11 , 2022
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பாக அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் 8-ம் தேதி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட உள் நோயாளிகள் வளாகத்தின் மூன்றாவது தளத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த பிரிவில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை, அந்த வளாகத்தில் எதிர் திசையில் அமைந்துள்ள அறையில் ஆறு நோயாளிகள் இருந்தனர். விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் எந்த நோயாளிக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. […]

You May Like