fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!… 12 நாட்கள் கூடுதல் விடுமுறை!… முழுவிவரம் இதோ!

பணியின்போது உறுப்பு தானம் செய்ய விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க வேண்டும் என்றால் மெடிக்கல் லீவ் எடுக்காமல் 42 நாட்கள் கேஸ்வல் லீவ் சம்பளத்துடன் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்படும்.

எல்லாவிதமான ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை விதிகள் பொருந்தாது. அதனைப் போலவே ரயில்வே ஊழியர்கள் மற்றும் இந்திய சேவை ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 42 நாட்கள் விடுமுறை மெடிக்கல் லீவ் அல்லாமல் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து குணமாக ஏதுவாக முப்பது நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 42 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விடுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

அடிதூள்...! திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு..! வரும் 8-ம் தேதி விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் உள்ளே...

Thu Jul 6 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]
’ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம்’..!! - ராதாகிருஷ்ணன்

You May Like