fbpx

தொழில்முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு..!! AI தொழில்நுட்பம் மூலம் புதுமையான மார்கெட் யுக்தி..!! சென்னையில் பிப்.19ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் வரும் 19ஆம் தேதி தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இந்த பயிற்சியானது வழங்கப்பட உள்ளது.

சாட்ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும், திறன்களை மேம்படுத்த உதவும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வணிகத் தேவைகளுக்கான சாட்ஜிபிடி ப்ராம்ட்டுகளை எழுதுவது, புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளை திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்த AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளத்தையும், 90806 09808 மற்றும் 98416 93060 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ராம்ப்ட்டுகள், அதனை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வாட்ஸ்-அப் சமூக அணுகலைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உயிருக்கே ஆப்பு வைக்கும் ஆர்.ஓ. வாட்டார்..!! தொடர்ந்து குடித்து வந்தால் அவ்வளவு தான்..!! WHO பரபரப்பு எச்சரிக்கை..!!

English Summary

It has been announced that a ChatGPD training course for entrepreneurs, business owners and startup founders will be held in Chennai on the 19th.

Chella

Next Post

மின் பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடமிருந்து யூனிட் ரூ.20க்கு மின்சாரம்...! தமிழக அரசு முடிவு

Thu Feb 13 , 2025
Electricity from private sector for Rs. 20 per unit to overcome power shortage

You May Like