fbpx

புதிய தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.5 கோடி வரை கடன்..!! மானியமும் உண்டு..!!

தமிழ்நாடு அரசு, படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குகிறது. புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, படித்த தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்துவதில் கணிசமாக மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கு திட்ட மதிப்பீடு சரியான முறையில் தயார் செய்திருக்க வேண்டும். ஜிஎஸ்டி பதிவு செய்த நிறுவனங்கள் மூலம் திட்ட மதிப்பீடு இருப்பது சிறப்பானதாக இருக்கும். அதேபோல் சிபில் ஸ்கோரும் நன்றாக இருந்தால் கடன் கிடைப்பது எளிதாக இருக்கும்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற 2024-2025ஆம் நிதியாண்டிற்கு 32 நபர்களுக்கு மானியத்தொகை ரூ.3 கோடியே 11 லட்சம் என இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். கல்வி தகுதியாக 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயபடிப்பு, பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும் மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மும்முனை மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

எனவே, புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளரை நேரிலோ அல்லது 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ, 8925533989 மற்றும் 8925533990 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்..? பெண்களே சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Government of Tamil Nadu provides loan assistance with subsidy to educated first generation entrepreneurs. Eligible first generation entrepreneurs to start a new business can apply online.

Chella

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா..? அண்ணாமலை கேள்வி..!!

Thu Jun 27 , 2024
Chief Minister Stalin does not want to conduct a caste-wise census..? Annamalai has questioned that.

You May Like