fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! தமிழக அரசு சார்பில் தொழில்நுட்ப பயிற்சி…! முழு விவரம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் தருமபுரி மாவட்டத்தில் அரசு சார்பில் அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

தொழில்நுட்பபயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் படிப்பு (Diploma) மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

Super opportunity for those who have completed their graduation…! Technical training by the Tamil Nadu government

Vignesh

Next Post

தை மாதத்தில் வரும் இந்த நாட்களை மறந்துறாதீங்க..!! அன்றைய தினம் இப்படி செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்..!!

Fri Jan 17 , 2025
It is said that when Tai is born, a path is born. On the first day of the month of Tai, the Dakshinaya Punya Kaal ends and the Uttarayana Punya Kaal begins.

You May Like