fbpx

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! நாளை இலவச தொழில் பயிற்சி மேளா..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், மே 8ஆம் தேதி நாடு முழுவதும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக தேசிய தொழில் பழகுநர் மேளா நடைபெற உள்ளது.

இதில், பல உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க உள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த மேளா நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்று பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை இதில் பங்கேற்கலாம் எனவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கடன் வாங்கிவிட்டு தலைமறைவான கணவர்….! மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சென்னையில் சோகம்….!

Sun May 7 , 2023
சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்த கோபி மற்றும் சிந்துஜா உள்ளிட்ட இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் வருடம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கோபி ஆடிட்டராக பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்னர் அவர் பலரிடம் கடன் வாங்கி அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், ஏல சீட்டு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு அதில் பெரும் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. […]

You May Like