fbpx

சூப்பர் திட்டம்..!! பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன்..!! எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்..? தமிழ்நாடு அரசு அதிரடி..!!

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ – மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும், பெண்கள் தொழில் ரீதியாக வளர்ச்சி பெற பல ஆண்டுகளாக சுய உதவிக்குழுக்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில், குழுக்கடனாக ரூ.15 லட்சம் வரை கடன் பெறும் திட்டம் உள்ளது. இந்த சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 கடன் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இந்த குழு தொடங்கி 6 மாதம் நிறைவடைந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். குழுவில் சேர விரும்புபவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பது அவசியம். அதேபோல், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 6% வட்டியாகும்.

Read More : இரவு தூக்கத்தின் இடையே சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..? அப்படினா இந்த நோய் எல்லாம் உங்களுக்கு இருக்கா..?

English Summary

The Tamil Nadu Backward Classes Economic Development Corporation has a scheme to obtain loans of up to Rs. 15 lakh as a group loan.

Chella

Next Post

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தம்...! மத்திய அரசு கால அவகாசம்...!

Thu Jan 30 , 2025
Amendment to Stamp Duty under the Legal Weights Act

You May Like