fbpx

சூப்பரோ சூப்பர்..!! விவசாயிகளுக்கு இலவச எரிபொருள்..!! டோக்கன்கள் விநியோகம்..!!

நாட்டில் விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருளை டோக்கன்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை விவசாய அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லிட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.

இந்நிலையில், விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இன்று கொழும்பு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, இன்று முதல் அனைத்து விவசாயிகளும், குறித்த டோக்கன்கள் மூலம் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் ரூ.55,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Mar 3 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer – I, Project Engineer – I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு […]

You May Like