fbpx

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கணுமா..? அப்படினா தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..!! சூப்பர் டிப்ஸ்..!!

உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரமாகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன, திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும். இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால், அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.

* வழக்கத்தைவிட அதிக தாகம்

* அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது

* சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.

(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)

* சோர்ந்திருத்தல்

* புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது

* எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்

* தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.

* கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் குறிப்புகள் :

* காலை எழுந்தவுடன் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் இனிப்பை சேர்க்கக் கூடாது. கார உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளுடன் சட்னி சேர்த்து உட்கொள்ளுங்கள். ஆப்பம், தேங்காய்ப்பால், இடியாப்பம், தேங்காய்ப்பால் என இனிப்பு உணவாக அது இருக்க வேண்டாம்.

* நீங்கள் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் முன்னும், ஒரு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். அதில், வினிகரை கலந்து பருகலாம் அல்லது நீங்கள் உட்கொள்ளும் காய்கறிகளில் வினிகரை கலந்து கொள்ளலாம்.

* தினமும் மதிய உணவு மற்றும் இரவு உணவு முடிந்த பின்னர் கட்டாயம் 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். சாப்பிட்டவுடன் வேகமாக நடக்கக் கூடாது. எனவே, மெதுவாகத்தான் நடக்க வேண்டும்.

* பழங்களை கடித்து மென்று பழங்களாக சாப்பிட வேண்டும். பழச்சாறுகளாகவோ அல்லது உலர்ந்த பழங்களாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த குறிப்புகள் மிகவும் முக்கியமானது. இவற்றை தினமும் செய்வதை உறுதிப்படுத்தினாலே உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இவற்றுடன் மருத்துவர் பரிந்துரைத்துள்ள மருந்துகளோ அல்லது வீட்டில் செய்யப்படும் மருத்துவ முறைகளையோ பின்பற்றினால் உங்கள் உடலில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கப்படும். நீங்கள் இதை பழக்கினாலே போதும், உங்களால் செய்யாமல் இருக்க முடியாது.

Read More : ”பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி நான் தொகுத்து வழங்க மாட்டேன்”..!! அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்..!!

English Summary

10 minutes of walking must be done daily after lunch and dinner. Do not walk fast after eating. So, walk slowly.

Chella

Next Post

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா..? இந்த தவறை செய்தால் என்ன ஆகும் தெரியுமா..? உஷாரா இருங்க..!!

Wed Aug 7 , 2024
In this post let us know about the do's and don'ts when providing Aadhaar number.

You May Like