fbpx

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு ட்விட்டரில் மனமுருகி நன்றி சொன்ன ரஜினிகாந்த்!

தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் துடிப்புடன் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் பேருந்தில் நடத்துனராக இருந்தவர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

ஆனால் இயல்பாகவே இவருக்கு இருந்த நடிப்புத் திறமை, இவர் செயல்களில் தென்பட்ட ஸ்டைல் உள்ளிட்டவற்றை கவனித்த இயக்குனர் கே பாலச்சந்தர், கடந்த 1975 ஆம் வருடம் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுவதற்கு இவரை அறிமுகப்படுத்தினார்.

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பின்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார் ரஜினிகாந்த். அதே போல தன்னை தமிழ் திரையுவதற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களை தன்னுடைய குருவாகவே ஏற்றுக் கொண்டார்.

அபூர்வ ராகங்களுக்கு பிறகு தன்னுடைய குருவான பாலச்சந்தர் இயக்கத்தில் முத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதே போல அவருடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அத்தனை திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் தான். 80களின் மத்தியில் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரையில் தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையாகவே திகழ்ந்து வருகிறார்.

இவர் சென்ற ஆண்டு நடித்த அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அந்த திரைப்படத்தின் கதையம்சம் அமையவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் நேற்று கொலாகலமாக கொண்டாடினர்.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு வாசலில் குவிந்த ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காத்திருந்தனர். ஆனால் ரஜினி ஊரில் இல்லை என்று அவருடைய மனைவி லதா தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைதுறையை சார்ந்தவர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்துக்கு நேற்று தங்களுடைய வாழ்த்து மழைகளை பொழிந்தனர்.

இந்த நிலையில் தான் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றியை தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்ற ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் போன்ற அரசியல் தலைவர்களுக்கும், மேலும் கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாருக்கான், அக்ஷை கான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் சச்சின் உள்ளிட்ட விளையாட்டு துறையை சார்ந்தவர்களுக்கும் மற்றும் ரசிகர்கள் என்று எல்லோருக்கும் அவர் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Post

இன்று ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்..!! அரசியல் குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..?

Tue Dec 13 , 2022
அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று […]

You May Like