fbpx

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: “ராம ஜென்ம பூமி செல்வதில் மகிழ்ச்சி..” முதல் ஆளாக அயோத்தி புறப்பட்ட சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த்”.!

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நண்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர்கள் ஆன முகேஷ் அம்பானி கௌதம் அதானி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களில் அடங்குவர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வை தலைமை ஏற்று பிரதமர் மோடி நடத்த இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அயோத்தி நகருக்கு புறப்பட்டு சென்றார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராம ஜென்ம பூமியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து புறப்படும் முதல் விஐபி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’ஆளுநர் பதவியே வேண்டாம்’...!! ’விரைவில் ஆட்சி மாற்றம்’..!! திமுக மாநாட்டின் 25 தீர்மானங்கள்..!!

Sun Jan 21 , 2024
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 25 தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். தீர்மானம் – 1 இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த ஜனநாயக பாதுகாவலர் தமிழக முதல்வருக்கு நன்றி. தீர்மானம் – 2 தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக நீடிக்க அயராது பாடுபடும் முதல்வருக்கு இளைஞரணி […]

You May Like