fbpx

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை…! தமிழகம் மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

தி கேரளா ஸ்டோரி பட தடை விவகாரத்தில் ஏன் தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா..‌? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ” தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமரும் அன்பு என்ற வழக்கானது விசாரணைக்க வந்தது அப்போது நீதிபதிகள்; நாட்டின் பிற பகுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் திரையிடப்படுகிறது என்றும் தடை விதிக்க எந்த காரணமும் இல்லை.

ஒரே மாதிரியான மக்கள்தொகை அமைப்பு உள்ள மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் திரைப்படம் ஓடுகிறது, எதுவும் நடக்கவில்லை. இதற்கும் படத்தின் கலை மதிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் படம் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் படத்தைப் பார்க்க மாட்டார்கள் என்று கூறியது. ஏன் தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா..‌? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடம்...! இம்மாத இறுதிக்குள் திறக்க திட்டம்...!

Sat May 13 , 2023
புதிய பாராளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதிக்குள் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் என சொல்லப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி பதவியேற்ற நாள் என்பதால், அதே தேதியில் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டிற்கான […]

You May Like