fbpx

அதிரடி…! டெல்லி முதல்வர் ED-யிடம் ஜூன் 2-ம் தேதி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு…!

மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார், தற்போது ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் உள்ளார். நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு மே 10 அன்று உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. தற்பொழுது ஜூன் 2ம் தேதி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், சில தொழிலதிபர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்று தற்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை 8 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையில் கேஜ்ரிவால் பெயர் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை. அதே போல ஆம் ஆத்மி கட்சியையும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் உள்ளார். நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு மே 10 அன்று உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. தற்பொழுது ஜூன் 2ம் தேதி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Vignesh

Next Post

iPhone, iPad, Mac பயனர்களே!… 'ஹை-ரிஸ்க்' எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

Tue May 21 , 2024
iPhone: ஆப்பிளின் ஐபோன்கள், மேக், ஐபாட்களை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்புக்காக இந்திய கணினி அவசரநிலைப் செயல்பாட்டுக் குழு (CERT-In) ஹை-ரிஸ்க்’ எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. T he Indian Computer Emergency Response Team (CERT-In) ஆப்பிள் சாதனங்களை பாதிக்கும் பல பாதிப்புகள் குறித்து உயர் தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. CIAD-2024-0027 என குறிப்பிடப்படும், iPads, Macs, iPhoneகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்துகளை […]

You May Like