சம்பாலில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஷாஹி ஜமா மசூதி கணக்கெடுப்பு தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அதன்பின்னர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றடைந்தது. அப்போது ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் மக்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கல் வீசுவதை நிறுத்துமாறு சம்பலில் உள்ள உள்ளூர் மக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் இருந்த மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவியது.
இந்த நிலையில், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றத்தின் நவம்பர் 19ஆம் தேதி உத்தரவை எதிர்த்து, சம்பாலின் ஷாஹி ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் தேசத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பில் அதன் தாக்கம் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, இந்த உத்தரவை அவசரமாக நிறுத்தி வைக்க குழு கோரியுள்ளது.
கருத்துக்கணிப்பை நடத்துவதற்கான முன்னாள் கட்சி முடிவு நியாயமற்றது மற்றும் ஆறு மணி நேர முன்னறிவிப்புடன் அவசரமாக செயல்படுத்தப்பட்டது, அமைதியின்மையைத் தூண்டியது என்று மனு வாதிடுகிறது. மேலும், கணக்கெடுப்பு ஆணையரின் அறிக்கை ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் போதிய அறிவிப்பு மற்றும் நியாயமான விசாரணையின்றி மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது. சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை விசாரித்து வரும் நிலையில், இயல்புநிலையை மீட்டெடுக்கும் மற்றும் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒரு தீர்மானத்தை குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.
Read more ; வாடகைக்கு காதலிகள்.. மிகப்பெரிய தொழிலாக மாறும் ‘வாடகை மனைவி’..!! எந்த நாட்டில் தெரியுமா?