fbpx

இந்த முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது..!! ஏன் தெரியுமா..? பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க..!!

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது அனைத்து முருகன் கோயில்களிலும் நடக்கும் போது, திருத்தணி கோயிலில் மட்டும் நடப்பதில்லை. அது ஏன் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கந்த சஷ்டி விரதம் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இது முருகர் திருக்கல்யாணத்துடன் வரும் 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த 7 நாட்களும் முருகனுக்கான விரதத்தை பக்தர்கள் தொடங்கிவிட்டனர். பலர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கி விரதத்தை தொடங்கியுள்ளனர். அங்கு இவர்கள் தங்குவதற்காக கொட்டகைகள் அமைத்து தரப்பட்டுள்ளன.

ஐப்பசி மாதம் சதுர்த்தி அமாவாசை திதியில் தீபாவளிக்கு பிறகு வரக் கூடிய 6 நாட்களும் கந்த சஷ்டி பெருவிழாவாகும். இந்த நாட்களில் முருகனை எண்ணி வழிபட்டால் நம் கோரிக்கைகள், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கந்த சஷ்டி விரத நாளில் முருகனின் பாடல்களை பாடி முருகனை வழிபடுவது வழக்கம்.

சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் முருக பக்தர்கள் உணவு, நீரின்றி மிக தீவிரமாக விரதமிருந்து அன்று மாலை நிகழும் சூரசம்ஹார நிகழ்வை கண்டு களிப்பர். அப்போது பக்தர்களின் துன்பங்கள் நீங்கி மன உறுதி கிடைக்கும். மறுநாள் முருகன் தெய்வானை திருமண நிகழ்வை கண் குளிர பார்க்கும் பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வர். இந்த கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளிலும் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், முருகனின் திருத்தணியில் இருக்கும் 5ஆம் படைவீட்டில் மட்டும் இந்த விழா நடைபெறாமல் இருக்கும். முருகன் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம் திருத்தணி. தணிகை என்றாலே கோபம் தணிதல் என்று அர்த்தம். திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகிறார். இதனால் இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருந்தாலும் கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், வள்ளித் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை கண் குளிர பார்த்தால் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Read More : ’பல நடிகைகளின் அரை நிர்வாண போட்டோ என்கிட்ட வரும்’..!! ’சில்க் ஸ்மிதா அவ்வபோது பணம் கொடுப்பார்’..!! பயில்வான் பகீர் பேட்டி..!!

English Summary

While Surasamharam is held in all Murugan temples, it is not only held in Tiruthani temple. Let’s see why in this post.

Chella

Next Post

Amaran day 4 collection : அஜித் விஜய் பட சாதனையை பின்னுக்கு தள்ளிய அமரன்..!! பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இதோ..

Mon Nov 4 , 2024
Let's check the box office status of Amaran, produced by Kamal Haasan and starring Sivakarthikeyan as the hero, which hit the screens on Diwali.

You May Like