திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ்,யசோதா தம்பதியினர் பராமரித்து வரும் பசுமாடு இரண்டு பெண் கன்றுகளை ஈன்று உள்ளது, இரண்டு கன்றுகளை ஈன்ற அந்தப் பசு மாடு யசோதா ஏற்கனவே ஒரு பராமரித்து வந்த பசு மாடு ஈன்றெடுத்த நாள் முதல் பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் கன்று ஈன்ற பசு, தற்போது 2வது பிரசவத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்று எடுத்திருப்பது பசுவின் உரிமையாளரான விவசாயிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. பொதுவாக பசுமாடு பிரசவத்தின்போது ஒரு கன்றை ஈன்றெடுக்கும் என்பதே இயல்பு, ஆனால் இவர்களின் பசு ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்று இருப்பது மிகவும் அரிது.
3 முதல் 4 வருடங்கள் பராமரித்தால் ஒரே ஒரு கன்றுக் குட்டியை ஈன்றெடுக்கும் பசு மாடு, ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்று குட்டிகளை ஈன்றிருப்பது மிகக்குவம் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். பசு மாட்டின் பாலின் மூலம் வரும் வருமானத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளனர் என்பதால் இந்த சம்பவம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவை அக்கம் பக்கத்தினரும் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர்.