fbpx

‘ஜோ’க்காக குந்தவை கதாபாத்திரத்தை அசினிடம் கொடுக்காத சூர்யா..! பத்திரிக்கையாளர் உடைத்த உண்மை..!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் விஜய் நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தத் திரைப்படம் குடும்ப ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

முன்னிலையில் இந்த திரைப்படம் தொடர்பாக சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தனர். அதில் பூமிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அசினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அந்த நேரத்தில் சினிமாவின் உச்சத்தில் இருந்த அசின் தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கதாபாத்திரம் தான் வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.

ஆனால் சூர்யா மற்றும் படக்குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நடிகர் சூர்யா குந்தவை கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் அசின் பூமிகா கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளாமல் அந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு.

Kathir

Next Post

ஆச்சரியம்! கருவில் கலைந்தாலும் தாயைக் காக்கும் குழந்தையின் செல்கள்!

Thu Nov 16 , 2023
மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மகத்தான ஒரு விஷயம். ஒவ்வொரு தாயும் தன் கருவில் வளரும் குழந்தையைக் காண்பதற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுத்து தவம் இருப்பார்கள். அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து அடுத்த கணமே அவர்களது கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும். ஆனால் எல்லோருக்கும் இது போன்ற பாக்கியம் வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு அவர்களது குழந்தை பிறந்தவுடன் இறக்க நேரிடலாம். அல்லது வயிற்றிலேயே இறந்தும் பிறக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து […]

You May Like