fbpx

IND vs SL | T20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்!!

இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இலங்கை அணியுடன் மோதுகிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா ஓய்வு அறிவித்ததையடுத்து திறமையான கேப்டனை நியமிக்கும் பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரன டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கலாம் என பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ” சூர்யகுமார் யாதவ் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவராக இருப்பார் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கருதுகின்றனர். அணியில் உறுதித்தன்மையை நிலைக்கச் செய்ய, நீண்டகால அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, 2026 டி20 உலகக் கோப்பை போட்டி வரை அந்த ஃபார்மட்டில் சூர்யகுமார் யாதவே கேப்டனாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 8 டி20 ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 தொடருக்கு சூர்யகுமார் கேப்டனாக இருக்கும் நிலையில், அவருக்கான துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியா – இலங்கை மோதும் டி20 தொடர், ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளது. அதே சமயம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்க இருப்பதால் சுப்மல் கில், லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு அணியின் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more ; கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்..!! 16 பேர் மாயம்!! 13 இந்தியர்களின் நிலமை என்ன?

English Summary

Suryakumar Yadav has been selected as the captain of the Indian team for the T20 series against Sri Lanka.

Next Post

தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

Wed Jul 17 , 2024
Last date for self-application for National Teachers Award 2024 extended to 18th July 2024

You May Like