ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வினோதமான வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் வீக்கமடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த வைரஸ் குறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவி 3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மக்கள் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ சுகாதாரத்துறையினர் முகாம்களை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த புதிய வைரஸ் காய்ச்சல் ஆந்திராவில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.