fbpx

Swiggy, Zomato-வை ஓரங்கட்டும் ONDC..!! இனி கம்மி விலையில் உணவு டெலிவரி..!!

இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிக முக்கியமான துறை என்றால் அது ஆன்லைன் உணவு டெலிவரி சேவையும் மற்றும் குவிக் காமர்ஸ் துறையும் தான். அதிலும் குறிப்பாக, உணவு டெலிவரியை பொறுத்த வரை Swiggy மற்றும் Zomato ஆகிய இரு தனியார் நிறுவனங்களும்
நெடுங்காலமாக இந்தியா முழுவதும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிறுவனங்கள் அறிமுகமான காலக்கட்டத்தில் 50% தள்ளுபடி, 90% தள்ளுபடி, குறித்த நேரத்திற்கு உணவு வரவில்லை என்றால் இலவசமாக உணவுகளை கொடுத்துவிட்டு செல்வது என புதிய புதிய பாணிகளை கையாண்டு வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்ததோடு, பல நபர்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையே கைவிட துவங்கினர்.

இப்படிப்பட்ட நேரத்தில் தான் சமீபகாலமாக Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் மெல்ல மெல்ல தங்களது கட்டணத்தை உயர்த்த துவங்கியதோடு, அத்தகைய கட்டணங்கள் நாம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் விலையை விட மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக
வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இந்த நிலையில், தற்போது Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களில் வாங்கப்படும் உணவுகளை விட ONDC மூலம் ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகள் மிக மலிவான விலையில் கிடைப்பதாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது.

ONDC என்பது ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் கமெர்ஸ் (Open Network For Digital Commerce) என்ற பொருளுடைய ஒரு தளமாகும். சொல்ல போனால் இது மத்திய அரசால் இயக்கப்படும் இந்தியாவின் இ-காமெர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளம். இதன் மூலமாக உணவு, வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்கள் என பலவற்றை இந்த ஆன்லைன் தளத்தின் மூலம் நம்மால் வாங்க முடியும்.

சிறு வணிகங்களையும் டிஜிட்டல் வர்த்தக துறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக மத்திய அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தளம், துவக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் தற்போது ஆன்லைன் புட் டெலிவரி சேவையில் புதிய பரிமாணத்தை பெற்று வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, McDonald’s, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day போன்ற சில பிராண்டுகள் மட்டுமே தற்போது ONDC தளத்துடன் இணைந்து செயலாற்றி வந்தாலும், மலிவான விலையில் உணவு டெலிவரி செய்வதால் அதிக வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருகிறது. மேலும், உணவு டெலிவரி என்று மட்டும் அல்லாமல் பிற டெலிவிரி சேவைகளும் செய்யக்கூடிய வசதி இந்த தளத்தில் இருப்பதால் அவற்றிலும் கூடிய விரைவில் இந்த தளம் கால் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதால், இது மிகவும் நம்பகமானது என பலரும் நம்ப துவங்கியுள்ளனர்.

இதனால் பெங்களூருவில் துவக்கப்பட்டு இயங்கி வரும் ONDC, தற்போது இந்தியாவின் பல நகரங்களில் உணவு மற்றும் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்ய உதவும் தளமாக மாறியுள்ளதோடு, இதன் மூலம் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் சேவை மற்றும் வருவாயை ONDC அதிகரிக்கும் என்று என எதிர்பாக்கப்படுகிறது.

Chella

Next Post

உறுதி செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றம்….! புது பட்டியல் இதுதான்….!

Wed May 10 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்களை கடந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த நிலையில் அமைச்சர் அதை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 23ஆம் தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பான ஒரு சிவப்பு பட்டியலை தயாரித்து அதில் சில […]

You May Like