fbpx

விறகு அடுப்பிற்கு மாற்றம்… கடந்த ஆண்டு 13 லட்சம் குடும்பங்கள் ஒருமுறை கூட சமையல் எரிவாயு வாங்கவில்லை…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக சமயல் எரிவாயு சிலிண்டர் பவாங்க விண்ணப்பிக்கவில்லை.

கடந்த மூன்று வருடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஒரே குடும்பத்தில் பல இணைப்புகளை வைத்திருப்பது, குடும்பங்களின் இடம்பெயர்வு காரணமாக புதியதாக கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். ஐதராபாத்தில் கடந்த 2014-ஆம் வருடம் சமயயல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது 1,105 ரூபாய் அதிகரித்து வினியோகம் செய்யப்படுகிறது.

ஆந்திரா தெலுங்கானாவில் சமையல் எரிவாயு விலை அதிகரித்ததினால் விறகின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும் மீண்டும் விறகு அடுப்புகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதுபற்றி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் கூறுகையில், ஆந்திராவில் கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், ஏழைகள் அடிக்கடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர். எரிவாயு சிலிண்டர் மானியத்தை மிகவும் குறைத்து விட்டனர். இது நடுத்தர மக்களின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவில் 6.2 லட்சம் தெலுங்கானாவில் 6.5 லட்சம் இணைப்புகளுக்கு புதிய சிலிண்டர் வாங்க யாரும் விண்ணப்பம் செய்யவில்லை.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தீபம் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு பெற்ற கிராமப்புற மக்கள் ஒரு முறை கூட மீண்டும் சமையல் எரிவாயு வாங்க விண்ணப்பிக்கவில்லை. அவர்களால் 1100 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க பொருளாதார வசதி இருக்காது. இதனால் விறகு அடுப்புகளை பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் மற்ற எரி பொருட்கள் எளிதில் கிடைப்பதால் சமையல் எரிவாயு அடுப்பில் இருந்து விறகு அடுப்பிற்கு மாற தொடங்கியுள்ளனர்.

Rupa

Next Post

அடுத்த வாரம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ..

Sat Aug 6 , 2022
அடுத்த வாரத்தில் மட்டும் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் அடுத்த வாரத்தில் மட்டும் 6 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக […]

You May Like