fbpx

மீண்டும் தந்தையானார் டி.இமான்..!! ஆனால் இது மனைவிக்கு பிறந்த குழந்தை அல்ல..!! குவியும் பாராட்டு..!!

நடிகர் விஜய்யின் தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். கிராமத்து கதைகளுக்கு இவர் தரும் முக்கியத்தும், மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது. இவர் தனது மனைவி மோனிகாவை கடந்த 2021ஆம் ஆண்டு பிரிந்தார். அப்போது, இமான் குறித்து பல விமர்சனங்களை எழுந்த நிலையில், உபால்டு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், இமானும் உபால்டும் சேர்ந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்த வண்ணமாக உள்ளனர். அப்படி இருக்கையில், இமான் தற்போது பெண் குழந்தை ஒன்றிற்கு தந்தையாகியுள்ளார். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கண் பார்வையற்ற தம்பதியினர் ஏற்கனவே உள்ள பிள்ளையை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பராமரிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால், அவர்களிடமிருந்து இந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர். இதனை அறிந்த மக்கள் இமான் – உபால்டு தம்பதியை பாராட்டி வருகின்றனர். உபால்டு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில், தற்போது இவர்கள் 2-வதாக பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.

டி. இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது, அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற சிவகார்த்திகேயன் தான் காரணம் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதற்கிடையே, பல விமர்சனங்களை கடந்து இமான், தனது இரண்டாவது மனைவியுடன் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

Read More : சென்னை To கோவைக்கு ரூ.2,890 டிக்கெட் கட்டணம்..!! தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக நினைப்பவர்கள் இதை பாருங்க..!!

English Summary

Ubald has already been married and divorced. While he has a daughter, now they have adopted their second daughter.

Chella

Next Post

தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கட் அவுட்டில் இடம்பெற்ற அஞ்சலை அம்மாள்..!! யார் இவர்..? பின்னணி இதோ..!!

Fri Oct 25 , 2024
Statues of freedom struggle martyrs Velunachiar and Anjalai Ammal from Cuddalore district are kept.

You May Like