அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், லோக்சவன் கல்யாண் மார்க்கிற்கு அமெரிக்கா அதிபரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பங்கு அளிக்கும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.