fbpx

தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு…! பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்…!

நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.சொந்த ஊரில் வசித்து வந்த நடிகர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குனர்-நடிகர் விசு மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். அவரது முதல் படம் பூந்தோட்டம். இவர் பிரபல நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பின்னர் பிரபலமானார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vignesh

Next Post

TET: இடைநிலை ஆசிரியர் பணி...! மொத்தம் 53,533 பேர்...! வெளியான முடிவுகள்...! முழு தகவல் உள்ளே...

Thu Dec 8 , 2022
இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது. இந்தத் தேர்வில் […]

You May Like