fbpx

அரிய வகை நோயால் நரக வேதனையை அனுபவிக்கும் தமிழ் நடிகை..!! உடலில் இப்படி ஒரு பிரச்சனையா..?

நடிகை சமந்தாவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ்பட நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நரக வேதனையை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. பின்னர், ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்தும் பரபரப்புக்கு உள்ளானார். இந்நிலையில், இவர் அரிய வகை நோயாளி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனக்கு ‘எண்டோ மெட்ரியோசீஸ்’ என்ற அரிய வகை வியாதி ஏற்பட்டுள்ளது. இதனால் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். ‘கேரளா ஸ்டோரி’ படத்தில் ஒல்லியாக இருந்தேன். அதன்பிறகு இன்னொரு படத்துக்காக உடல் எடையை கூட்ட தினமும் அதிகம் சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்கள் சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் மாறியது. அதோடு அரிய வியாதியும் வந்தது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்தேன்” என்றார்.

ஏற்கனவே நடிகை சமந்தா, நடிகர் பகத் பாசில் ஆகியோர் அரிய வியாதியால் அவதிப்படும் நிலையில், நடிகை அடா சர்மாவும் அதுமாதிரியான நோயில் சிக்கி இருப்பதாக பகிர்ந்துள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சர்மா ரசிகர்கள் ஆறுதலளிக்கும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Read More : 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து உல்லாசம்..!! 5 மாதம் கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்..!! இன்ஸ்டா நட்பால் வந்த வினை..!!

English Summary

After actress Samantha, another Tamil film actress has said that she is suffering from a rare disease and has been going through hellish agony.

Chella

Next Post

நீங்க கண்ணாடி யூஸ் பண்றீங்களா..? இந்த உணவுகளை சாப்பிட்டால் அது தேவையே இல்லை..!!

Sat Jun 15 , 2024
If you want your eyes to be healthy, you must eat certain foods. About that in this post.

You May Like