fbpx

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ..! ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள் X’ ட்ரைலர் எப்படி..?

மகான் படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் “ஜிகர்தண்டா டபுள் X”. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் ஜிகர்தண்டா என்றே கூறலாம். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாகவும் ’அசால்ட் சேது’ என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அசால்ட் சேது கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றார். இப்படி கொண்டாடப்பட்ட படத்தின் இரண்டாம் பாகமான “ஜிகர்தண்டா டபுள் X” படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த ஜிகர்தண்டா டபுள் X படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர். சந்திரமுகி 2ன் தோல்விக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் படம் இது. மேலும் மார்க் ஆண்டனி படம் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்ற எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த ஜிகர்தண்டா டபுள் X படம் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதைத்தொடர்ந்து நேற்று தீக்குச்சி எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரில் 1975 என்று தொடங்குகிறது. பாண்டிய எனும் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும், ரே டாவ்சன் எனும் இயக்குனர் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் “தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ” “வில்லனுக்கு வில்லன் வில்லாதிவில்லன் எப்பவுமே இருப்பான்… இருக்கான்” “இப்போ நல்லவங்களா பத்தி படம் எடுத்த யாரும் பாக்குறது இல்ல மா” போன்ற டிரைலரில் வரும் வசனங்கள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ள்ளது.

Kathir

Next Post

நேபால் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 157ஆக உயர்வு..! மண் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்…! எண்ணிக்கை உயரலாம்…!

Sat Nov 4 , 2023
மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 89 பெண்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 190 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 550 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள ராமிதாண்டாவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த போது, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் […]

You May Like