சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னோடியாக உள்ளது. இதை எலக்ட்ரிக் வாகன சந்தையாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு, World Economic Forum உடன் இணைந்து, “தமிழ்நாடு: அடுத்த உலகளாவிய EV உற்பத்தி மையத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறது. இக்கூட்டத்தில் உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகனகளை தயாரிக்கும் நிறுவனங்களின் CEO களுடன் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கைடென்ஸ் தமிழ்நாடு.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் EV எகோசிஸ்டத்தை மேம்படுத்துவதற்கும், முன்னேற்றுவதற்கும், சூப்பர்சார்ஜ் செய்வதற்கும் “இந்தியாவின் EV தலைநகரம்” என்ற அளவுக்கு தமிழ்நாட்டை உயர்த்தும் முயற்சியில் முக்கிய படியாக இருக்கும். மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக உலகளாவிய EV உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாட்டையை மையமாக மாறுவதற்கான பாதையில் கொண்டு செல்வதற்கும் இத்துறையில் ஆழ்ந்த தொழில்துறை விஷயங்கள் தொடர்பான கலந்துரையாடல் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் இந்த வருடத்திற்குள் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் எனவும் இதற்காக சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது பாக்ஸ்கான். மே 31 ஆம் தேதி பாக்ஸ்கான் வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் பாக்ஸ்கான்-க்கு இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் உதவும் என்றும், இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் இருசக்கர வாகன சந்தையை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது