தமிழகத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி வரையில், பல்வேறு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், நாளைய தினம் ஓரிரு பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் 15 ஆம் தேதி அதாவது, நாளை மறுநாள் முதல், வரும் 19ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரத்தின் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை, 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல், 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல், 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.