தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தை அமித்ஷா தொடங்கி வைப்பார்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்; என் மக்கள்’என்ற பெயரில், திருச்செந்தூரில் இருந்து ஜூலை 9- ம்தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முதல் சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஒருநாளைக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் வீதம் 100 நாட்கள் நடைபயணம் செல்லதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.
இந்த நடைபயணத்தின் இப்பொழுது வாகனங்கள் மூலம் அண்ணாமலை பயணம் செய்யுவும் திட்டமிட்டுள்ளார். ஜூலை 9ஆம் தேதி இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இதில் பங்கேற்பதற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பதிவு செய்துள்ளனர்.