fbpx

திடீர் பிளான்…! 6 நாள் பயணமாக இன்று இரவு லண்டன் செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…!

6 நாள் பயணமாக இன்று இரவு லண்டன் செல்கிறார் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நரேந்திர மோடி 2014 மே 26 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார், பின்னர் மே 30, 2019 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அரசின் 9 ஆண்டுகள் சாதனை குறித்த நாடு முழுவதும் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

6 நாள் பயணமாக தமிழகபாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று இரவு லண்டன்‌ பயணம் மேற்கொள்ள உள்ளார். லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து பாஜகவின்‌ 9 ஆண்டுகால சாதனை குறித்து பேச உள்ளார். இந்த பயணம் முழுவதும் கட்சி ரீதியான பயணம் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் தொடங்கப்பட்ட பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை மோடி அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அதேபோல ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் 48.9 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன இப்படி பல மக்கள் நல திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில்...! ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! முழு விவரம்...

Wed Jun 21 , 2023
தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. […]

You May Like