fbpx

பாஜகவின் மாநில செயலாளர் நள்ளிரவில் அதிரடி கைது…..! போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்…..!

தமிழக பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ் ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக செயல்படும் இவர், திமுக வெளியிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்பாக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் இவர் மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்பாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது எனவும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார் என்றும் பதிவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சரியாக 11:15 மணியளவில் சென்னை டிநகரில் இருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்த எஸ் ஜி சூர்யாவை சாதாரண உடையில் வந்த மதுரை காவல்துறையினர் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்து கொண்ட அவருடைய ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் இருக்கின்ற காவல்துறை ஆணையரகம் அலுவலகம் வெளியே எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட பாஜகவை சார்ந்தவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் அங்கிருந்து கரைந்து சென்றனர்.

Next Post

அரசு பேருந்தில் பயணம் செய்த போக்குவரத்து துறை அமைச்சர்…..! நறுக்கென கேள்வி கேட்ட பயணி அமைச்சர் வழங்கிய நச் பதில்…..!

Sat Jun 17 , 2023
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி வளத்தாமங்கலம் பகுதியை இணைத்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காரைக்கால் முதல் கும்பகோணம் வரையில் செல்லும் தமிழக அரச பேருந்து சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைக்கும் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பேருந்து […]

You May Like