fbpx

பிப்.10ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!! பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..?

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக 2025 – 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. எனவே, இதுதொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல, சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி கூடிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : மாதம் ரூ.62,000 சம்பளம்..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் வேலை..!!

English Summary

It has been announced that a cabinet meeting will be held on the 10th under the chairmanship of Chief Minister MK Stalin.

Chella

Next Post

புதிய வருமான வரி சட்டம்..!! என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது தெரியுமா..? நிதியமைச்சரே சொன்ன முக்கியமான விஷயம்..!!

Mon Feb 3 , 2025
The mega announcement in the Union Budget, which announced income tax exemption of up to Rs. 12 lakh, was well received by the middle class.

You May Like