தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையில் சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விபரம்: தமிழ்நாடு CBCID காவல் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு இடங்களில் 5 சட்ட ஆலோசகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் இந்தியாவில் மத்திய சட்டம் அல்லது மாநில சட்டம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம், அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்: இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு காவல்துறை www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் காவல் இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, 220 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.
Read more : எப்போதும் இளமையான தோற்றம் வேண்டுமா..? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்..!!