fbpx

ஆந்திர அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் கடிதம்..

கொற்றலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார்..

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழையும் இந்த ஆறு, திருத்தணி அருகே 2 கிளைகளாக பிரிந்து பூண்டி ஏரியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது.. திருவள்ளூர் மாவட்ட விவசாயத்தின் நீர் ஆதாரமாகவும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதராமாகவும் இந்த ஆறு விளங்குகிறது..

இந்நிலையில் கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 இடங்களில் புதிய அணைகளை கட்டா ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.. ஒரு வாரத்திற்குள் ஒப்பந்தம் பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.. இந்த அணை கட்டுப்படும் பட்சத்தில் திருவள்ளூர் மாவட்டம் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், சென்னையின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது..

இந்நிலையில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் ” கொற்றலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டினால் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் குடிநீர் வளம் பாதிக்கும்.. எனவே கொற்றலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும்.. தமிழ்நாடு அரசினை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.. ” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. போலீசார் விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!

Sat Aug 13 , 2022
குன்றத்தூரில் உள்ள காலடிப்பேட்டை அம்பேத்கர் தெருவில் வருபவர் ரமேஷ்(45).  இவர் ஒரு தனியார் கிளப்பில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அலமேலு(42). இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது அலமேலு வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர்களுக்கு மோனிஷா, வசந்தரா என இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று மகள்கள் இருவரும் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.  வீட்டில் ரமேஷும் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்துளனர். […]

You May Like