கூண்டோடு ராஜினாமா செய்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்..! சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்..!

எஸ்.சி.பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவில் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கூண்டோடு ராஜினாமா செய்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்..! சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்..!
கே.எஸ்.அழகிரி

எஸ்.சி. பிரிவின் துணைத் தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பான புகார் கடிதத்தையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், எஸ்.சி. பிரிவில் கடந்த 8 ஆண்டுகளாக உழைத்தவர்களை இப்பதவிக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பரிந்துரைக்காமல் தங்களை புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

Chella

Next Post

தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு...! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்....!

Sun Jul 17 , 2022
தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள STAFF CAR DRIVER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

You May Like