fbpx

தமிழகமே… 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு…! அரசு வழிகாட்டுதல் வெளியீடு…!

தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினசரி செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு, புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்துறைக்கு மாவட்ட வாரியாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு, தனியார் மருத்துவமனைகளிடமிருந்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பிஃஎப் ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1 லட்சம் கிடைக்கப் போகுது..!!

Thu May 16 , 2024
பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு […]

You May Like