fbpx

#Tngovt; 10 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை.‌‌..! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1,000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியுடைய படித்த வேலை வாய்ப்பு இல்லாத நபர்கள் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நீங்கள் பெற்று கொள்ளலாம். கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. SC/ST பிரிவினர் 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப்பட்டம்‌ பெற்றவர்கள்‌ இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்‌.

இதற்கு நீங்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து வரும் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

ஒருத்தருக்கு இத்தனை மனைவி , இத்தனை குழந்தைகளா ?...வியப்பில் ஆழ்த்திய தென்னாப்பிரிக்கர் ……

Mon Sep 12 , 2022
தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட  பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே 15 மனைவிகளை திருமணம் செய்து அவர்களை ஒரே வீட்டில் ஒற்றுமையாக 107 குழந்தைகளுடன் […]

You May Like