தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தமிழக அரசு மருத்துவத்துறையில் இருக்கும் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 17-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.
வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினர் அதிகபடியாஅக் 59 வயது வரை இருக்கலாம். இதில் முன்னாள் ராணுவத்தினரும் அடங்குவர். இதர வகுப்பு பிரிவினரில் மாற்றுத்திறனாளிகள் 47 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்ட 25.02.2025 தேதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பல் மருத்துவ அறுவை சிகிச்சை (Dental Surgery) பெற்றிருக்க வேண்டும். மெட்ராஸ் மெடிக்கல் பதிவுச் சட்டம், 1914 கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். 12 மாதத்திற்கு குறையாமல் House Surgeon (CRRI) பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பல் மருத்துவ உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழி எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) இரண்டு தாள்கள் கொண்டு நடத்தப்படும். இதில் தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயமாகும். தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும்.
Read more: உடல் அழகுக்காக மரண வலியையும் தாங்கும் மெண்டவாய் பழங்குடி பெண்கள்..!! எங்க இருக்காங்க தெரியுமா..?