fbpx

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…! அகவிலைப்படி 38% ஆக உயர்வு…! அரசு அதிரடி அறிவிப்பு…!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன்‌ பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல்‌ செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல்‌ 38 சதவீதமாக உயர்த்தப்படும்‌. இதனால்‌ சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன்பெறுவார்கள்‌. இந்த உயர்வால்‌ ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படுமெனினும்‌, அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களின்‌ நலன்‌ கருதி இந்த நிதிச்‌ சுமையை அரசு ஏற்றுள்ளது.

மேலும்‌ சம வேலை சம ஊதியம்‌ என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும்‌ ஆசிரியர்களின்‌ கோரிக்கைகள்‌ குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர்‌ – செலவினம்‌ அவர்களின்‌ தலைமையில்‌, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குனர்‌ ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்‌. இந்த குழுவின்‌ பரிந்துரைகளைப்‌ பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023 ஆம்‌ ஆண்டின்‌ தொடக்கத்தினை உவகையுடன்‌ கொண்டாடி மக்கள்‌ வாழ்வை வளம்‌ பெற செய்வதற்கான பெரும்‌ பணியில்‌ அரசுடன்‌ ஒத்துழைத்து செயல்பட வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

Vignesh

Next Post

#திருச்சி: மருத்துவர் இல்லாததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்த பரிதாபம்..!

Sun Jan 1 , 2023
திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி (26), கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த செவிலியர்கள் நீண்ட நேரமாகியும் குழந்தை பற்றி விமலன் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் கூறவில்லை. நேரம் கழித்த பின்பே குழந்தை இறந்ததை பற்றி […]

You May Like