தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேற்றைய தினம் முதல் செலுத்தப்பட்டு வருகிறதது.
இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் எந்த தேதியில் வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்ற தகவலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில் வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்டுகிறது.
வங்கிகளில் பொதுவாக முதியோர் உதவித்தொகை, அரசு பணியாளகர்க்ளின் ஊதியம் போன்றவைகள் 1ஆம் தேதியில் வங்கி கணக்கில் வந்து சேரும், ஆனால் மகளிர் உரிமைத்தொகை 1.6 கோடி பேருக்கு செலுத்துவதால் 15 ஆம் தேதியை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.