fbpx

இவர்கள் அனைவருக்கும் ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசு திட்டம்…!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீரமைப்பு இனத்தை சார்ந்த நபர்கள் தமிழக அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீரமைப்பு இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

English Summary

Tamil Nadu government scheme to provide subsidy up to Rs.3 lakh.

Vignesh

Next Post

குரங்கு, பைத்தியம் என கிண்டல் செய்த கிராம மக்கள்!. பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த வீராங்கனை!

Thu Sep 5 , 2024
Villagers used to taunt him by calling him a monkey and a mad person, but now he created history by winning a medal in the Paralympics

You May Like