ஆளுநர் மாநாட்டில் நாளை கலந்து கொண்டால் வீடு திரும்ப முடியாது என துணைவேந்தர்களை உளவுத்துறை போலீசார் மிரட்டியதாக ஆளு நர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இந்த நிலையில் ஊட்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவி இன்று நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். அதேபோல பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இம்மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.
இதில், கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்தார். பின்னர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு நடந்த துணைவேந்தர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினர். ஆளுநர் மாநாட்டில் நாளை கலந்து கொண்டால் வீடு திரும்ப முடியாது என துணைவேந்தர்களை உளவுத்துறை போலீசார் மிரட்டியதாக ஆளு நர் ரவி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்க முடியவில்லை என குறிப்பிட்டு பேசினார். உளவுத்துறை போலீசார் மூலம் பல்கலை கழக துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளதக ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பஹல்காம் கொடூர தாக்குதல்.. அந்த 3 பயங்கரவாதிகள் யார்..? அடையாளங்களை வெளியிட்டது காவல்துறை..