fbpx

18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் தமிழக அரசு…! எதற்காக தெரியுமா…? முழு விவரம்

சமூக நலத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும், 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சமூக நலத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1.00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல். வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வுகாண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீரசெயல் புரிந்திருக்க வேண்டும்.

மேற்காணும் விருதினை பெற குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை 20.11.2023 மாலை 5.45க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்!… மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடாக மாறியதன் பின்னணி!

Wed Nov 1 , 2023
தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு, சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தலைநகரமான சென்னையை ஆங்கிலத்திலும் CHENNAI என்றே அழைக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1996ம் ஆண்டில் ஆணையிட்டார். தமிழ்நாடு என்று பேரறிஞர் […]

You May Like