fbpx

இப்படி ஒரு திட்டமா…? கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 வழங்கும் தமிழக அரசு…! முழு விவரம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து “பிக்மி” எண் பெற்றவுடன் ரூ.2,000 வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2,000 வழங்கப்படும்.

இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2,000 மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

English Summary

Tamil Nadu Government will provide Rs.18,000 to pregnant mothers

Vignesh

Next Post

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை...! தமிழகத்திற்கு 2 ரயில்... தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி...!

Sat Aug 31 , 2024
Madurai - Bengaluru Vande Bharat Train Service...! 2 trains to Tamil Nadu

You May Like